/* */

சேலம் காவல்துறையினர் 3800 பேர் தபால் வாக்குபதிவு

சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் 3800 பேர் தபால் வாக்குபதிவு மூலம் வாக்களிக்கின்றனர்.

HIGHLIGHTS

சேலம் காவல்துறையினர் 3800 பேர் தபால் வாக்குபதிவு
X

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த கூட்டணி கட்சி மற்றும் சுயேட்சைகள் என 207 வேட்பாளர்கள் போட்டியிகின்றனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட கூடிய சேலம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர் முதல் அதிகாரிகள் வரை தங்கள் வாக்கை பதிவு செய்யும் வகையில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி துவங்கியது.

இதற்காக சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் பணியாற்றக்கூடிய காவல்துறையினர், சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள கல்லூரியில் தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு , வீரபாண்டி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் ஆகிய தொகுதிகளுக்கு தனித்தனியாக தபால் வாக்குப் பதிவு செய்ய அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. காவல்துறையினர் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தங்கள் தபால் வாக்குகளை, சின்னங்கள் அச்சடிக்கப்பட்ட தாளில் முத்திரையிட்டு தங்கள் பதிவு செய்து, பின்னர் வாக்கு சீட்டினை, அதற்கான கவரில் வைத்து ஒட்டி, சீலிடப்பட்ட பெட்டியில் போட்டனர். சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினர் 2,404 பேரும், மாநகர பகுதியில் பணிபுரியும் காவலர்கள் 1,452 பேர், வெளி மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய சேலத்தைச் சேர்ந்த காவல்துறையினர், மற்றும் 290 ஊர்க்காவல் படையினர் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வாக்குச்சீட்டு மூலம் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து, தபால் வாக்கு படிவத்தை பெற்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு அனைத்தும் கேமரா பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தபால் வாக்குப்பதிவு நேற்றும், இன்றும் நடை பெற்று வருகிறது.

இதற்காக வருவாய் துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் பொது வாக்குப்பதிவு ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தற்போதே காவல்துறையினர், வாக்குச்சீட்டு மூலம் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதேபோல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே தங்கள் தபால் வாக்கினை பதிவு செய்துவருகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 20 தேர்தல் பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வீடு தேடி சென்று 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் தபால் வாக்குகளையும், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளையும் பெற்று, சீலிடப்பட்ட பெட்டியில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

Updated On: 1 April 2021 2:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...