/* */

சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி

சேலத்தில், தேவையின்றி வாகனங்களில் திரிவோரை பிடித்து, மாநகர போலீசார் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

HIGHLIGHTS

தமிழ்நாடு முழுவதும் கொரோனோ நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதையடுத்து, முழு ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது. சேலத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

எனினும், இதை மதிக்காமல் வாகன ஓட்டிகள் பலர், ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு, வெளியே திரிகின்றனர். இவ்வாறு, தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரியும் நபர்களை பிடித்து மாநகர காவல்துறை வழக்குப் பதிவு செய்துவந்தனர். கடந்த வாரங்களில் 1440 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், சேலம் மாநகர காவல்துறை இன்று திடீரென மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேவை இல்லாமல் சுற்றித் திரியும் நபர்களை பிடித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அஸ்தம்பட்டி ரவுண்டானா, குகை, பழைய பேருந்து நிலையம், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இத்தகைய பரிசோதனை செய்து வருகின்றனர். திடீரென காவல் துறை எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத வாகன ஓட்டிகள், கலக்கமடைந்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  3. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  4. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  5. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  6. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  8. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  9. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்