/* */

பக்ரீத் பண்டிகை: சேலத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சேலத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பக்ரீத் பண்டிகை: சேலத்தில்  இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
X

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு,  சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மசூதியில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இறைத்தூதர்களின் ஒருவரான இப்ராஹிம் நபி அவர்களின் தியாகத்தை நினைவூட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அரபியா மாதம் துல்ஹஜ் பத்தாம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ஜாமியா மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். இதில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து தொழுகை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஈகைத் திருநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று முழுவதும் விடுபட்டு நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும் மேலும் மூன்றாவது அலை வரும் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், இந்த நோய்த்தொற்று முழுவதும் நீங்கிட வேண்டி, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Updated On: 21 July 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?