/* */

மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி நாடக கலைஞர்கள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தி மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி சேலத்தில் நாடக கலைஞர்கள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி நாடக கலைஞர்கள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடக கலைஞர்கள்.

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பிலிருந்து பல தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த போதிலும் நாடக கலைஞர்கள் இன்னும் இதிலிருந்து விடுபடவில்லை. திருவிழாக்களுக்கு தடை நீடிப்பதால் மேடை நாடகங்களும் நடத்த வழியின்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் நிலைமையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் நாடக கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு விதமான வேடங்களை அணிந்து வந்த கலைஞர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க சிறு நாடகத்தையும் நடத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மேடை நாடகங்கள் நடத்த முடியாத காரணத்தால் கடன் வாங்க கூட வழியின்றி வாடுவதாக கூறும் இவர்கள், வாக்குகளை பெறுவதற்காக எங்களைத் தேடி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர்கள் உள்பட எந்த சங்கத்தினரும் எங்களை கண்டுகொள்ளவில்லை என வேதனை தெரிவித்தனர். எங்களின் கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி நாடகங்களை நடத்திக் கொள்வதாகவும் நாடக கலைஞர்கள் உறுதியளித்தனர்.

Updated On: 23 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது