/* */

சேலம் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

Salem News Today: சேலம் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் வரும் 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

பைல் படம்

Salem News Today: சேலம் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வருகின்ற வெள்ளிக்கிழமை 16.06.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Jun 2023 12:36 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!