/* */

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருள் பறிமுதல்

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ 68 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா பறிமுதல்

HIGHLIGHTS

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட  குட்கா பொருள்  பறிமுதல்
X

பெங்களூரிலிருந்து திண்டுகல்லுக்கு தடைசெய்யப்பட்ட 68 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா மற்றும் லாரியை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தனர்.

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு தடைசெய்யப்பட்ட 68 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா மற்றும் லாரியை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் மற்றும் ஊழியர்கள் ஓமலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது பெங்களூரிலிருந்து குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, தீவட்டிப்பட்டி அருகே சந்தேகப்படும்படியாக வந்த லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, அந்த லாரியில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள் மூட்டை மூட்டையாக இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து, சுமார் 50 மூட்டை குட்கா மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பெங்களூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், குட்கா கடத்தி வந்த லாரியின் உரிமையாளரும் டிரைவருமான பெரியசாமியிடம், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கூறும்போது: பறிமுதல் செய்யப்பட்ட குட்கா வை உணவு மாதிரிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 50 மூட்டை குட்கா மற்றும் டிரைவர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவர் என தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மூட்டை மூட்டையாக பல கோடி ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 Sep 2021 4:15 PM GMT

Related News