தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
madeswaran temple chariot function மாதேஸ்வரன் மலையில் இன்று யுகாதி பண்டிகையையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
HIGHLIGHTS

மாதேஸ்வரன் மலையில் யுகாதி பண்டிகையையொட்டி இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
madeswaran temple chariot function
தெலுங்கு வருட பிறப்பையொட்டி சுவாமி தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
madeswaran temple chariot function
மாதேசுவரன் கோயில் என்கிற தலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது. இம்மலை தெற்கு கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நாகர் மாவட்டத்தில் உள்ளது. மலை மாதேஸ்வரன் கோயிலுக்கு மைசூரிலிருந்து 150கி.மீ மற்றும் பெங்களுரிலிருந்து 210கி.மீ தூரம் இருக்கிறது.
மேட்டூர் அருகே உள்ள மலை மாதேஸ்வரன் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி தேரோட்ட நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் பல ஊர்களிலிருந்தும் வந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
madeswaran temple chariot function
யுகாதி பண்டிகையையொட்டி நடந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள்
madeswaran temple chariot function
ஆண்டு தோறும் யுகாதி பண்டிகையையொட்டி இக்கோயிலில் தேரோட்டநிகழ்ச்சியானது நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் இன்று காலை 10மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சியானது வெகு விமர்சையாக நடந்தது. தேரோட்டத்தை மாதேஸ்வரன் மலை சாலுார் மடாதிபதி ஸ்ரீஸ்ரீ சாந்த மல்லிகார்ஜீன் சுவாமிகள் முறைப்படி துவக்கிவைத்தார். விஐபிக்கள் மற்றும் பக்தர்கள் என பலரும் தேரினை இழுத்தனர்.
madeswaran temple chariot function
madeswaran temple chariot function
ஸ்ரீ மலை மாதேஸ்வரன் கோயில் மிகவும் பிரபலமான பாரம்பரியமிக்க திருத்தலம். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள். திருத்தலத்தின் பரப்பளவு 155.57 ஏக்கர் ஆகும். மாதேஸ்வரன் மலையில் தலபேட்டா, கலவவூர், இந்திகநாதா, போன்ற மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கே வரும் மக்கள் கோயிலுக்கு வருவதோடு இங்கேயுள்ள இயற்கையை ரசிக்கவும் வருகிறார்கள்.
இந்த மலையின் உயரம் 3000 அடி ஆகும். மாதேசுவரன் கோவிலைக் கட்டியவர் ஜீன்சே கெளடா, மற்றும் குருபா கெளடா என்ற ஜமீன்தார்கள் ஆவர். ஸ்ரீ மாதேஸ்வர கடவுளை, சிவனின் ஒரு அவதாரம் என மக்கள் கருதுகிறார்கள். புனித மாதேஸ்வரா அவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறன. 600 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ மாதேஸ்வரன் இத்திருத்தலத்திற்கு வந்து அவர் தன் பாவத்திற்குப் பரிகாரம் பெற்றார். இப்பொழுதும் அவர் பரிகாரம் தருகிறார் என மக்கள் நம்புகிறார்கள்.
madeswaran temple chariot function
மாதேஸ்வரன் மலையில் சிறுமிகள் அழகான உடையணிந்து தேருக்கு முன்னால் ஊர்வலமாக சென்றனர்.
madeswaran temple chariot function
மலை மாதேஸ்வரன் புலியின் மேலிருந்து பயணம் செய்தார். அந்த வாகனத்தைச் சில பேர் குழி வாகனா எனவும் கூறுவார்கள். மலை மாதேஸ்வரன் பல அற்புதங்கள் செய்து மக்களைக் காப்பாற்றியதால் `இங்கே உள்ள மக்கள் இன்னும் மலை மதேஸ்வரன் அந்த மலையின் பகுதியிலே வசிக்கிறார் என நம்புகிறார்கள். கிராமத்து மக்கள் மலை மாதேஸ்வரனின் அற்புதங்களைப் பாட்டாக பாடுகின்றனர். அதை ஜனபத காவியம் அல்லது நாட்டுப்புறக்காப்பியம் எனக் கூறுவார்கள்.
மலை மாதேஸ்வரன் கலியுகத்தில் பிறந்தார். அவர் வெள்ளையாக இருப்பார். இவரின் அம்மையாரின் பெயர் யுட்ராஜமா. இவரை சிறுபிள்ளையில் வழிநடத்தியவர்கள் சுட்டூர்மூட் மற்றும் குன்டூர்மூட் ஆவார்கள். இவர் ஸ்ரீ கையிலா என்ற பகுதியில் இருந்து வந்தவர் என நம்பப்படுகிறது. இவர் சிறு வயதியிலே பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். பிறகு தான் இவர் மலைப் பகுதிக்கு வந்துள்ளார் என நம்பப்படுகிறது. அந்தக் காட்டுப் பகுதியில் 77 மலைகள் உள்ளன. அது மிகவும் ஆபத்தான பகுதி எனக் கருதப்படுகிறது. அவர் ஆறாம் நூற்றாண்டில் அவர் காட்டுப் பகுதிக்குச் சென்றதாக வரலாறு கூறுகிறது. 50 வருடத்திற்கு முன்பு இந்த மலைக்குச் ரோடு வசதி இல்லை. அதனால் இங்கே வரும் பக்தர்கள் பெரும்பாலும் நடந்து தான் வந்தார்கள். ஆனால் இப்போது ரோடுகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளால் போடப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன.
madeswaran temple chariot function
madeswaran temple chariot function
இத்தேரோட்ட நிகழ்ச்சியில் சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். இத்தேரோட்ட நிகழ்வில் கோயில் செயலாளர் சாத்யாயினி தேவி , உபசெயலாளர் பசவராஜ், கணக்கு மற்றும் ஆவணங்கள் மேற்பார்வையாளர் நாகேஷ்,கோயில் ஊழியர்கள் , காவல்துறை அதிகாரிகள்ஊர் பிரமுகர்கள், தமிழக கர்நாடக பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.