/* */

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்

கொங்கணாபுரம் சனிக்கிழமை வாரச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால் மாற்று இடத்தில் ஆடுகள் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்.

HIGHLIGHTS

வாரச்சந்தைக்கு தடை: மாற்று இடத்தில் விற்பனைக்காக ஒன்று கூடிய விவசாயிகள்
X

ஆடு விற்பனைக்காக மாற்று இடத்தில் கூடிய விவசாயிகள்.

கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரசந்தைக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தடை விதித்திருந்தார். இந்நிலையில், தொடர்ந்து நான்கு வாரமாக கொங்கணாபுரம் சனிக்கிழமைகளில் சந்தை கூடாததால் இதனை நம்பியிருந்த எடப்பாடி தாலுக்காவிற்குட்பட்ட விவசாயிகள் 100க்கணக்கானோர் தாங்கள் வளர்த்த வந்த ஆடு, கோழிகளை விற்க முடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை வாரச்சந்தைகூடாததால், அனைத்து விவசாயிகளும் ஒன்று கூடி முடிவெடுத்து கொங்கணாபுரம் அடுத்த சாணாரப்பட்டி காட்டுப்பகுதியில் தற்காலிக ஆட்டு சந்தையை கூட்டி தாங்கள் வளர்த்த ஆடு கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டிய தற்காலிக ஆட்டு சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, கோழிகளை விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர்.


Updated On: 21 Aug 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...