/* */

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் மாவட்டத்தில் பசுமை முதன்மையாளர் விருதுபெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
X

சேலம் பசுமை முதன்மையாளர் விருதுபெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை மற்றும் கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக சேலம் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள், நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பசுமை முதன்மையாளர் விருதுக்கு விண்ணப்பிக்க 2024 ஏப்ரல் 15-ஆம் நாள் கடைசி நாள் ஆகும். மேலும் கூடுதல் தகவல் தேவைப்படுவோர் சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அவர்களை அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சிர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Jan 2024 3:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...