/* */

வயிற்றுவலி காரணமாக பள்ளிமாணவி தூக்கிட்டு தற்கொலை

வாலாஜா அடுத்த அனந்தலையில் வயிற்றுவலி காரணமாக பள்ளிமாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வயிற்றுவலி காரணமாக பள்ளிமாணவி தூக்கிட்டு தற்கொலை
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப் பேட்டை அடுத்த அனந்தலையைச் சேர்ந்த கன்னியப்பன்,அவர் மனைவி சந்திரகாந்தா இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நதியா(17), வரலஷ்மி(13) என இருமகள்கள் உள்ள நிலையில் மூத்தமகள் நதியா , 12ஆம் வகுப்பி படித்து வந்தார்..

அவருக்கு அடிக்கடி வயிற்று வலிஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கன்னியப்பன், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கும் தாயார் சந்திரகாந்தா அருகில் கட்டிட வேலைக்கும் சென்றுள்ளனர். இதனால் நதியா மட்டும் வீட்டில் இருந்தார் அப்போது நதியாவிற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக அவர் வீட்டில் உள்ள பேனில் புடவையை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வீடு திரும்பிய கன்னியப்பன் மூத்த மகள் தூக்கில் சடலமாக தொங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுத்தார் . அதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கன்னியப்பனை தண்ணீர் தெளித்ததில் விழித்த அவர் தனது மகள் தூக்கிட்டது குறித்து கூறியுள்ளார். உடனே அவர்கள் வீட்டிற்குள் தொங்கியிருந்த நதியாவின் சடலத்தை மீட்டனர்.

மேலும் இதுகுறித்து வாலாஜாப் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த போலீஸார் சடலத்தைகைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு கன்னியப்பன் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்