/* */

வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் தமிழகம் எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் மா. சுப்பிரமணி பேட்டி

HIGHLIGHTS

வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
X

வாலாஜா அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார் 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவிலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அமைச்சர் மா . சுப்பிரமணிஆய்வு செய்து, 120 படுக்கைகள் வசதிகொண்ட கோவிட் கேர் சென்டரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அரசு மருத்துவமனை, சோளிங்கர் அரசு மருத்துவமனை, வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை ஆகிய வற்றில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்து பகுதியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தைப் பொருத்தவரை நேற்றைய தினம் 318 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 636நபர்கள் பூரண குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி சென்றனர். நோயால் பாதிக்கப்பட்ட வர்களைக் காட்டிலும் குணமானோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது

ஒட்டு மொத்த மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் தொற்று ஏற்பட்டவர்கள் காட்டிலும் இருமடங்கு குணம் பெற்று இல்லம் திரும்பி உள்ளனர் என்றார்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை படுக்கைகள் என நேற்று இரவு வரை 30002 படுக்கைகள் காலியாக உள்ளது பெரிய அளவிலான படுக்கை தட்டுப்பாடுகள் குறைந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும். வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது இந்த மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தி மேம்படுத்தி தரப்படும் என்று அவர்தெரிவித்தார்

மேலும் மருத்துவ பணியாளர் தேவைக் குறித்து கேட்டதற்கு அவர் ராணிப்பேட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை 2000 மருத்துவர்கள் 6000 செவிலியர்கள் 3700 மருத்துவப் பணியாளர்களை பணி அமர்த்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளார் அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் அவர்களுக்கு தேவைக்கேற்ப மருத்துவர்கள் பணி நியமனம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது இம் மாவட்டத்தில் 30 மருத்துவர்கள் 68 செவிலியர்களும் படிப்படியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்தார்

ஆரம்ப அறிகுறிகளின்போது வராமல் மூச்சுத்திணறல் ஏற்படும் வரை வீட்டில் இருந்து பிறகு மருத்துவமனைக்கு வருவதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கிறது என்றார்

கொரோனா மூன்றாம் கட்ட அலை குறித்து செய்தியாளர் கேள்விக்கு, ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கி அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டுமானப்பணிகள் இருப்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறோம். குறிப்பாக சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் எல்லா பகுதிக்கும் சென்று மருத்துவ கட்டமைப்பை உறுதி செய்து வருகிறோம் மருத்துவமனைக்கு என்ன மாதிரியான வசதிகள் தேவையோ அந்த கட்டமைப்பை அமைத்துத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாம் கட்ட அலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் தமிழக உள்ளது என்றார்

Updated On: 4 Jun 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  6. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  9. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்