/* */

தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க "கிராமங்கள் செல்வோம் " திட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அசம்பாவிதங்களை தவிர்க்க "கிராமங்கள் செல்வோம் " திட்டத்தை எஸ்பி தீபாசத்தியன் துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

தேர்தலில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கிராமங்கள் செல்வோம்  திட்டம்
X

இராணிப்பேட்டை எஸ்பி தீபா சத்யன்

தமிழகத்தில் இராணிப்பேட்டை உள்ளிட்ட 9மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் முதல் கட்டமாக வரும் 6ம் தேதியும், காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் வரும் 9ம் தேதி இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கான தேர்தலை நடத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. வேட்பாளர்கள் தங்களுக்கு உறுதிசெய்யப்பட்ட சின்னங்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்திட இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "கிராமங்கள் செல்வோம்" திட்டத்தை துவக்கிவைத்தார்.

அதில் மாவட்டதிலுள்ள அனைத்து காவல்நிலைய அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் , தினசரி10கிராமங்களுக்கும், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் 5 கிராமங்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 3 கிராமங்கள் என தினசரி நேரடியாகச் சென்று மக்களிடம் நேரடியாகப் பேசி நல்லுறவை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அவர்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் அசம்பாவிதங்கள் ஏற்படாதிருக்க கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதன்பேரில், காவல்துறைமீது மக்களுக்கு நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். ஆய்வு செய்து குற்ற நடவடிக்கைகள் ஈடுபடுவோர்களை கண்காணிப்பது, அவர்கள் குறித்து ,தகவல் பெற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு தினசரி செல்லும் ஆய்வுகள், நடவடிக்கைகளை, அனைத்து நிலைய உதவிஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் தங்களது ஆய்வறிக்கையின் விபரத்தினை மாவட்ட கண்காணிப்பாளரின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையின் பேரில் பொதுமக்கள் - காவல்துறையினரின் நல்லுறவு மேம்பட்டு, குற்றங்கள் நிகழாமல் அமைதியான முறையில் தேர்தல் நடக்க ஏதுவாக இருக்கும் என்று இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் திட்டத்தினை துவக்கி அறிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 10:17 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...