/* */

ராணிப்பேட்டையில் இலவச தையல் மிஷின் தருவதாக மோசடி

இராணிப்பேட்டையில் பெண்களிடம் இலவச தையல் மிஷின் பெற்று தருவதாக பணம் வாங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

ராணிப்பேட்டையில் இலவச தையல் மிஷின் தருவதாக மோசடி
X

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்து சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மீரா, நவல்பூர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை எடுத்து அன்னை மாதா இலவச தையல் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார். அதில் பயிற்சி பெறுவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தையல் பயிற்சி பெற்று வந்துள்ளனர்

இந்நிலையில் தையல் பயிற்சி பெற்று வந்துள்ள பெண்களிடம் மீரா, பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க ஒருத்தருக்கு ரூ.300 என 60க்கும் மேற்பட்டோரிடம் வசூல் செய்துள்ளார்

மேலும் அவர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறும் பொழுது அவர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதாகக் கூறி அனைவரிடமிருந்து தலா 2ஆயிரம் வசூல் செய்துள்ளார்

ஆனால் இதுவரை தையல் மிஷனை பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து தையல்மிஷனுக்காக பணம் தந்தவர்கள் அனைவரும். மீராவிடம் 2ஆயிரத்தை திருப்பிகேட்டு வந்துள்ளனர் ஆனால் மீரா ஏமாற்றி வந்த நிலையில், அவரை பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸில் புகார் அளிக்கப்போவதாக மீரா மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதைக்கேட்டு அதிர்ச்சியில் பெண்கள் பணமோசடி செய்து மிரட்டி வரும் மீரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Updated On: 29 Jun 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....