/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவிப் பள்ளிகளில் பணியாற்றிவரும் 10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற தேர்வு

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில்  10 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற தேர்வு
X

டாக்டர் ராதாகிருஷ்ணன்

வாழ் நாள் முழுவதும் நல்லாசிரியராக வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கியவர், டாக்டர் சர்வபள்ளி. ராதாகிருஷ்ணன் ஆவார். .அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஐ வருடந்தோறும் ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது . அத்தகைய விருதினைப்பெற அரசு, நிதியுதவிபெரும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களை ஆண்டு தோறும் அரசு தேர்வு செய்து அவர்களை கௌரவிக்கும் விதமாக விருதினை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பெல் ராமகிருஷ்ணா பள்ளி தலைமையாசிரியர் கோட்டீஸ்வரன், ஆற்காடு முப்பதுவெட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, தரணிபாய், திருப்பாற்கடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ப, பவித்ரன், திமிரி ஒன்றியம், கணியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. ஜெயந்தி, சோளிங்கர், கொடைக்கல் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துளசிராமன், இராணிப்பேட்டை சிப்காட் சி.எஸ்.ஐ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதல்வர் வேணுகோபால், அரக்கோணம் சிஎஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ். அற்புதராஜ், காரை அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி, முதுகலை ஆசிரியர் கே பழனி, இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட மாவட்டத்தில் பணியாற்றி வரும் 10ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 4 Sep 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!