/* */

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: நோய் தாெற்று பரவு அபாயம்

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள். சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் பக்தர்களிடையை பீதி.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்:  நோய் தாெற்று பரவு அபாயம்
X

இராமேஸ்வரத்தில் முக கவசம் அணியாமல் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆடி, பாடி சாமி தரிசனத்தால் உள்ளூர், மற்றும் வெளியூர் பக்தர்களிடையை பீதி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வெள்ளி,சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட மூன்று நாட்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்காணோர் சமூக இடைவெளியை மறந்து கடலில் குளித்தனர். முகக்கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக அரசு விதி மீறி குவிந்த சுற்றுலா பயணிகளால் நோய்த்தொற்று அபாயம் உருவாகும் என உள்ளூர் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசு,இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு, கோவில்களில் சாமி தரிசனத்திற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று இரவு முதல் அமல் படுத்தவுள்ளது. இதனையொட்டி வெள்ளி சனி ஞாயிறு உள்ளிட்ட மூன்று நாட்கள் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசு அறிவிப்பால் இன்று அதிகாலை முதல் உலக சுற்றுலாத் தலமும் புண்ணிய திருத்தலமான ராமேஸ்வரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடலில் நீராடியதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

அதே போல கூட்டம் கூட்டமாக கோவிலின் முன் பகுதியில் குவிந்தனர். கோயிலுக்குள் முழுக் கட்டுப்பாட்டுடன் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணிந்தால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டாலும், சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்வதும் கோயிலுக்குள் வட மாநில பக்தர்கள் ஆடி,பாடி சாமி தரிசனம் செய்தது உள்ளூர் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Jan 2022 2:50 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...