/* */

முழு ஊரடங்கால் முடங்கியது ராமேஸ்வரம்: சுற்றுலா கடைகள் வேலை இழப்பு

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகள் நம்பி வாழ்ந்து வரும் ஆயிரகணக்கானோர் வேலை இழந்து வாடினர்.

HIGHLIGHTS

முழு ஊரடங்கால் முடங்கியது ராமேஸ்வரம்: சுற்றுலா கடைகள் வேலை இழப்பு
X

வெறிச்சோடி காணப்படும் ராமேஸ்வரம் கோயில் வீதி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மிக முக்கிய சுற்றுலாத்தலம் என்பதால் வார விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரகணக்கான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வாகனங்களில் ராமேஸ்வரம் வருவது வழக்கம். ஆனால் இன்று முழு ஊரடங்கால் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளான திட்டகுடி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நான்கு ரத வீதிகளில், கடற்கரை, உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டம்மின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்பவர்கள் மட்டும் போலீசாரால் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று காணும் பொங்கல் என்பதால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடற்கரையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்துடன் கூடுவது வழக்கம்.

ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி, அரியமான், சீனியப்பா தர்கா, காரங்காடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை நாட்களில் கூட்டநெரிசலுடன் காணப்படும் ராமேஸ்வரம் முக்கிய சுற்றுலா பகுதிகள் இன்று ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை நம்பி ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வரும் ஆயிரகணக்கானோர் வேலை இழந்து வருவாய் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 16 Jan 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  2. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  5. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  6. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  7. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  8. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  9. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...