/* */

மத்திய அரசைக்கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்.

HIGHLIGHTS

மத்திய அரசைக்கண்டித்து  இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
X

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர் .

மீனவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடரில் கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்துப் விசைப்படகுகளிலும் கருப்புக் கொடி கட்டி கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுடனர். தில்லி பாராளுமன்றத்தில் துவங்க உள்ள குளிர் கால கூட்ட தொடரில், மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில், கடல் எல்லை வரையறை, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு அபராதம் கூடிய சிறை தண்டனை, மீன்பிடிக்கச் செல்லும்போது அனுமதிச்சீட்டு பெறுவதற்கு கட்டணம், பிடித்து வரும் மீன்களுக்கு விலை நிர்ணயம் போன்றவை மீனவர்களை பாதிக்கக்கூடியதாக இருக்கும் போன்ற மீனவர் விரோத அம்சங்களை கண்டித்து இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மீனவர்கள் நடத்திய போரட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ள மசோதவை நிறைவேற்ற கூடாது என வலியுறுத்தி மீனவர்கள் கண்டன கோஷமிட்டனர். மீனவர்களின் போராட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Updated On: 20 July 2021 4:44 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  3. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  5. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  8. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  10. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்