/* */

5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம். 5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் 19 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

HIGHLIGHTS

5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
X

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம். 5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் 19 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் ஏற்கனவே இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 20 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை இரண்டு கை குழந்தையுடன் 5 குடும்பத்தை சேர்ந்த மேலும் 19 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர். இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு பைபர் படகில் திருகோணமலையை சேர்ந்த 10 பேர் இரண்டு கை குழந்தைகளுடன் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இராமேஸ்வரம் மெரைன் போலீசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் மன்னார் யாழ்பாணத்தில் இருந்து நேற்று இரவு 9 பேர் ஒரு பைபர் படகில் மன்னாரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை தனுஸ்கோடி வந்து இறங்கி பின்னர் அரசு பேருந்து மூலம் தானாக மண்டபம் அகதிகள் முகாமிற்கு சென்றனர். இது குறித்து தகவலறிந்த மண்டபம் மெரைன் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 19 இலங்கை தமிழர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 10 April 2022 5:08 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!