/* */

பொன்னமராவதி பகுதி 4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித்திட்ட கலைநிகழ்ச்சி

பொன்னமராவதி பகுதி 4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித்திட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

HIGHLIGHTS

பொன்னமராவதி பகுதி  4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வித்திட்ட  கலைநிகழ்ச்சி
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதி 4 பள்ளிகளில் இல்லம் தேடி கல்வி திட்ட  கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த மாணவ மாணவிகளின் கல்வி கற்கும் திறனை மேம்படுத்தவும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் மேலும் பள்ளி செல்லாமல் இருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற ஒரு திட்டத்தை அறிவித்தது.

அதன்படி இன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே க.புதுப்பட்டி, கேசராபட்டியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் மணிகண்டன் தலைமையிலான கலைபயண குழுவினரின் கலைநிகழ்ச்சியுடன் நடைபெற்றது.

இதில் நிகழ்விற்கு ஊராட்சித்தலைவர் செல்வி தலைமைவகித்தார். க.புதுப்பட்டி, கேசராபட்டி தொடக்கபள்ளியில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலராக சேர்வது பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

நிகழ்ச்சியிலிருந்து மாணவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமையாசிரியர் ஜெயஜோதி, ஆசிரியர்கள் மாரிமுத்து,ஆனந்த், கிராம் கல்வி குழு தலைவரகள் ராமச்சந்திரன்,செல்லையா, துணைத்தலைவர் ரோஜாபானு கலிபுல்லா, வார்டு உறுப்பினர் மகபத்நிஸா, பள்ளி மேலாண்மை குழு தலைவரகள் ராமு, சந்திரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதே போல அஞ்சுபுளிப்பட்டி, மைலாப்பூர் பள்ளிகளிலும் நடைபெற்றது.

Updated On: 17 Dec 2021 2:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!