/* */

தந்தை நினைவுநாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய திமுக நிர்வாகி

திமுக நகர துணைச் செயலாளர் மதியழகன் தந்தை நினைவுநாளில் சமத்துவம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

HIGHLIGHTS

தந்தை நினைவுநாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கிய  திமுக நிர்வாகி
X

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திமுக நிர்வாகிகள்

புதுக்கோட்டை தெற்கு 3ம் வீதியில் உள்ள திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது அலுவலகத்தில் சமத்துவம் அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதேபோல் கோவிட் 19 தொற்று காலத்தில் உணவில்லாமல் தவித்த பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கியும் அதேபோல் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதேபோல் இன்று சமத்துவ அறக்கட்டளை மற்றும் திமுக நகர துணைச் செயலாளர் மதியழகன் தந்தை சின்னையா நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோருக்கு அரிசி பருப்பு காய்கறி மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை சமத்துவம் அறக்கட்டளை தலைவரும் திமுக நகரக் கழகச் செயலாளருமான நைனா முகமது, நகர துணைச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் அப்புகளை, நியாஸ், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 July 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது