/* */

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 09.11.2022 முதல் 08.12.2022 வரை பெற்று பூர்த்தி செய்து வழங்க ஆணையம் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் கீழ் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

01.01.2023 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2023-ஆம் ஆண்டில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும் வாக்காளர்களின் பெயர், முகவரி, மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 09.11.2022 முதல் 08.12.2022 வரை பெற்று அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிட இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2023-இன் கீழ் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் எம்.வள்ளலார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தற்போது 18-வயது பூர்த்தியடைந்த அனைவரையும் 100 சதவீதம் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும், வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கல் முகாம் நடைபெறுவதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் விளம்பரங்கள் மூலம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிக்கான விண்ணப்பப் படிவங்களானது (படிவம் 6, 6பி, 7 மற்றும் 8) அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தினங்களில் வாக்காளர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கோட்டாட்சியர்கள் எஸ்.முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்) சு.சொர்ணராஜ் (அறந்தாங்கி) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், தேர்தல் வட்டாட்சியர் கலைமணி மற்றும் வட்டாட்சியர்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 13 Nov 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது