/* */

முன்னாள் எம்எல்ஏ கோரிக்கைய நிறைவேற்றி கொடுத்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர்

திருச்சி எம்பி உறுப்பினர் நிதியில் இருந்து காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டது

HIGHLIGHTS

முன்னாள் எம்எல்ஏ கோரிக்கைய நிறைவேற்றி கொடுத்த திருச்சி எம்பி திருநாவுக்கரசர்
X

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மேம்பாட்டு நிதியிலிருந்து காந்தி நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாற்றம் வகுப்பறையை துவக்கி வைத்த முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதை பித்தன்

முன்னாள் எம்எல்ஏ விடுத்த கோரிக்கையை திருச்சி எம்பி திருநாவுக்கரசர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்தார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரா.சு. கவிதைபித்தன், காந்தி நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வசதியாக ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுக்க வேண்டுமென திருச்சி எம் பி திருநாவுக்கரசரிடம் கோரிக்கை வைத்தார் .

இதனை அடுத்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து காந்திநகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிதாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைக்க நிதி ஒதுக்கினார். கட்டிமுடிக்கப்பட்ட புதிய வகுப்பறையை, முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளர் எம். லியாகத் அலி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், மா.மணிவேலன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் மரியஎட்வின், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி தர்மராஜ், பள்ளித் தலைமையாசிரியை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’