/* */

திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வரும் 5-ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் (5.8.2022 )வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

HIGHLIGHTS

திருமயம் அரசு கலை  அறிவியல் கல்லூரியில் வரும் 5-ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்
X

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 05.08.2022 -ல் தொடங்குகிறது.

திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) வே.நாகராஜன் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 05.08.2022 வெள்ளிக்கிழமை அன்று முதல் நடைபெற உள்ளது. 05.08.2022 அன்று காலை 10 மணிக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள், NCC முதலான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவிற்கும், 05.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பி.எஸ்சி கணிதம் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் பிரிவிற்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் 08.08.2022 அன்று காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் மற்றும் பி.காம் வணிகவியல் துறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், தேதி மற்றும் கட்டண விவரங்கள் கல்லூரி அறிவிப்பு பலகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

05.08.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி - சிறப்பு பிரிவு (விளையாட்டு, NCC, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் பிள்ளைகள்). 05.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி. இளநிலை பாடப்பிரிவுகள் (கணிதம், கணினி அறிவியல்). 08.08.2022 திங்கள்கிழமை முற்பகல் 10 மணி. இளங்கலை பாடப்பிரிவுகள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியல்) நடைபெறவுள்ளது.

மேலும் கொண்டுவரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம், SSLC , பிளஸ்1 மற்றும் பிளஸ்2 மதிப்பெண் பட்டியல் (அசல், நகல்கள் - 4), பிளஸ்2 மாற்றுச் சான்றிதழ் (அசல்- நகல்கள்- 2), நிரந்தர சாதிச்சான்றிதழ் அட்டை (அசல், நகல்கள் - 2), இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (நகல்கள் - 2), வருமானச் சான்றிதழ் (நகல்கள் - 2), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (4), சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் அதற்குரிய மூலச்சான்று அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகும்.

ஆண்டு கட்டண விவரம், பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் வணிகவியல் ரூ.3025- ம், பி.எஸ்.சி கணிதம் ரூ.3045- ம், பி.எஸ்.சி கணினி அறிவியல் ரூ.2445- ம் ஆகும் கோவிட்– 19 பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) முனைவர்.வே.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Aug 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...