/* */

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டையில் புதிதாக சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

HIGHLIGHTS

சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
X

புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் அறிகுறிகளுடன் வரும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள கோவிட்-19 சித்தா சிறப்பு மருத்துவமனையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து பார்த்து அறிந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில்:

நாளை முதல் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்படுவதால் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நெறி முறைகளோடு மருந்துகளை வழங்கவும் அனைத்து விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூடிய தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

நைட்ரஜன் தயாரிக்கும் நிறுவனங்களும் ஆக்சிஜன் தயாரிக்க முன்வந்தால் அவர்களுக்கும் உடனடியாக அனுமதி அளிக்கப்படும்,இதனை ஏற்று பல்வேறு தொழில் நிறுவனங்கள் ஆக்சிஜன் தயாரிக்க முன்வந்துள்ளது,

இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் இருப்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Updated On: 14 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  2. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  3. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  4. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  5. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  6. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  9. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்