/* */

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடு

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடுஇன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநாடு
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்க பிரதிதிநிதிகள் மாநாட்டில் மாநில துணை தலைவர் சுரேஷ் பேசினார்.

Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceதமிழ்நாடு ஏ. ஐ. டி. யு. சி.கட்டிட தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட எட்டாவது பிரதிநிதிகள் மாநாடு இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜி. நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சுரேஷ் சங்க கொடியேற்றி தொடக்க உரையாற்றினார்.ஏ. ஐ. டி. யு. சி. மாவட்ட தலைவர்.கே ஆர் தர்மராஜன் அமைப்பு நிலைகுறித்து பேசினார்.

Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceடாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சௌந்தரராஜன்,கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் ஜீவானந்தம்,அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி எம். மீரா மைதீன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அன்னவாசல் ஒன்றிய செயலாளர்ஏ. நாகராஜ் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினார்கள்.


Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த .செங்கோடன் நிறைவுரையாற்றினார் .புதிய நிர்வாகிகள் தலைவர்ஜி .நாகராஜ், செயலாளர் டி .ராஜா பொருளாளர் கே கணேசன்,துணைத் தலைவர் கே. ஆர். தர்மராஜன், அழகு மன்னன், துணைச் செயலாளர் டி .சின்னையா, அமல்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conference60 வயது நிறைந்த கட்டுமான தொழிலாளர்களுக்குமாதம் 6000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு கட்டிக் கொள்ள நலவாரியத்தில் நடைமுறைகளை எளிமைப்படுத்தி 4 இலட்சம் ரூபாய் நிதி வழங்க வேண்டும்.

பெண் கட்டுமான தொழிலாளிக்கு பேறுகால உதவி தொகை மாதம் ரூ. 15,000 வீதம்ஆறு மாதங்களுக்கு 90 ஆயிரம் வழங்க வேண்டும் இ. எஸ். ஐ., பி. எப். திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

Tamil Nadu A.I.T.U.C. Building Workers Union Representative Conferenceகட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பழைய ரேஷன் கார்டு கேட்பதை தவிர்க்க வேண்டும்.சம்பந்தப்பட்ட தொழிலாளிக்கு தெரியப்படுத்தாமல் விசாரிக்காமல் மனுவை நிராகரிப்பதை தவிர்க்கவேண்டும். ஆன்லைன்பதிவை மாத கணக்கில் கிடப்பில் போடாமல்உடனுக்குடன் பரிந்துரைசெய்ய வருவாய்த்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.முடிவில் பொருளாளர் கே. கணேசன் நன்றி கூறினார்.

Updated On: 6 Nov 2022 3:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்