/* */

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டி: திருவள்ளூர் வீரருக்கு முதல் பரிசு

25 வீரர்களுக்கு ரொக்கப்பரிசாக ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டி: திருவள்ளூர் வீரருக்கு முதல் பரிசு
X

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டியில் திருவள்ளூர் சுரேந்தர் முதல் பரிசும் தூத்துக்குடி சேர்ந்த மித்ரன் ஆனந்த் இரண்டாம் பரிசும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசையும் தட்டிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் 70வது மாநில அளவிலான ஓபன் சதுரங்க போட்டி ஐந்து நாட்கள் புதுக்கோட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .

சதுரங்கப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சென்னை, திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் என தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 7 வயது முதல் 85 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண்கள் என 246 வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி போட்டியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் முதல் பரிசு, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மித்ரன் ஆனந்த் இரண்டாம் பரிசும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் பாலசுப்பிரமணியன் மூன்றாம் பரிசு, கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஆகாஷ் நான்காம் பரிசையும் வென்றனர்.

இவர்களுக்கு ரொக்க பரிசும் கோப்பையும் சான்றிதழ்களை மாவட்ட சதுரங்கக்கழகத்தலைவர் எஸ். ராமச்சந்திரன் வழங்கி வாழ்த்தினார். மேலும் பங்குபெற்ற வீர வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது. முதல் நான்கு இடங்களை விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 25 வீரர்களுக்கு பணப் பரிசுகள் ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கப்பட்டது.இதைத் தவிர புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன மற்றும் போட்டியிலே பங்குபெற்ற மூத்தோர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன், செயலர் கணேசன், துணைத்தலைவர் அடைக்கலவன், இணைச் செயலாளர் புதுகை செல்வம், ஜெயக்குமார்,டாக்டர் கோபாலகிருஷ்ணன், ஜெயராமன், பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தன.ர்

Updated On: 18 Sep 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  3. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  6. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  8. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  9. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  10. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?