/* */

புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா: லோகோ வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

ஏழாவது உலகத் திரைப்பட விழா வருகின்ற அக்டோபர் 14 முதல் 18-ஆம் தேதிவரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா: லோகோ வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
X

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள ஏழாவது உலகத் திரைப்பட விழாவுக்கான இலட்சினையை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  வெளியிட்டார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஏழாவது உலகத் திரைப்பட விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இலட்சினை (லோகோ)யை வெளியிட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா வருகின்ற அக்டோபர் 14 முதல் 18-ஆம் தேதிவரை புதுக்கோட்டை வெஸ்ட் திரையரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 தலைசிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

திரையிடலுக்கு நடுவே தினமும் ஒரு திரைப்பட இயக்குனர், ஒரு எழுத்தாளர் பங்கேற்று பார்வையாளர்களுடன் விவாதம் நடத்த உள்ளனர். திரைப்பட விழாவிற்கான இலட்சினை (லோகோ) சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இலட்சினையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்டார்.

இந்நிகழ்வில், திரைப்பட வரவேற்புக்குழுத் தலைவர் கிருஷ்ண வரதராஜன், தமுஎகச மாநில துணைத் தலைவர்கள் நா.முத்துநிலவன், ஆர்.நீலா, மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், பொருளாளர் கி.ஜெயபாலன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.தனிக்கொடி, மாவட்ட துணைத்தலைவர் மு.கீதா, துணைச் செயலளார் சு.பீர்முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Updated On: 18 Sep 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’