/* */

அரசு ஒதுக்கீடு செய்யும் 40 ஆயிரம் கோடியில் ஆசிரியர்களின் ஊதியம் 38 ஆயிரம் கோடி

அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அந்தந்த தொகுதி எம்எல்ஏ நிதியை ஒதுக்கீடு செய்ய கேட்டுக் கொண்டுள்ளோம்

HIGHLIGHTS

அரசு ஒதுக்கீடு செய்யும் 40 ஆயிரம் கோடியில் ஆசிரியர்களின் ஊதியம் 38 ஆயிரம் கோடி
X

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..

பள்ளிக் கல்விக்கு ஒதுக்கப்படும் 40 ஆயிரம் கோடியில் 38 ஆயிரம் கோடி, ஆசிரியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மீதமுள்ள 2 ஆயிரம் கோடியில் தான் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது. கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது..

பின்னர் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான தேவை உள்ளது. அதனடிப்படையில் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை என்ன என்ன தேவை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமும் மாணவ மாணவிகளிடமும் கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பள்ளிகளில் சிசிடிவி கேமரா தற்போது பொருத்தப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்து கொடுக்கவுமாறும் கேட்டுக் கொண்டுள்ளோம்.மேலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 40 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் 38 ஆயிரம் கோடி ஆசிரியர்களின் சம்பளத்திற்கு செலவு செய்யப்படுகிறது மீதமுள்ள 2 ஆயிரம் கோடியை தான் 45,000 பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு செலவு செய்யப்படுகிறது.

எனவே பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக அரசு பொறுப்பு ஏற்கிறதோ அப்போது பள்ளிக்கல்வித் துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மாணவிகள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுப்பதற்கு மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.புகார் தெரிவிப்பதற்கு பல்வேறு ஹெல்ப்லைன் நம்பர்களும் வழங்கப்பட்டுள்ளது.விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று ஆசிரியர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவது என்பது வருத்தம் அளிக்க கூடியதாகவே உள்ளது. ஆசிரியர்களுக்கு முறையாக கவுன்சிலிங் வழங்கப்பட உள்ளது.ஆசிரியர்கள் பணியிட கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல திமுக மட்டுமல்ல தமிழக மக்களின் ஆசையாக உள்ளது. தமிழக முதல்வர் விரைவில் இது குறித்து உரிய முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அரசுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் தேவை இருப்பினும் அவர்களை உரிய முறையில் ஆய்வு செய்து, அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்த பின்தான் அவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர் என்றார் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி..

Updated On: 15 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  4. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  5. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  8. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  9. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  10. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...