/* */

மக்கள் புகார்:மீன்சந்தை குளத்தை நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ

மீன் சந்தையிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் இக்குளத்தில் விடப்பட்டதால் நல்லதண்ணீர் குளம் உப்பு நீர் குளமாக மாறியது.

HIGHLIGHTS

மக்கள் புகார்:மீன்சந்தை குளத்தை நேரில் ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ
X

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மீன் மார்க்கெட் அருகே உள்ள குளத்தை ஆய்வு செய்த புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை மீன் சந்தை எதிரில் உள்ள குளம் துர்நாறறம் வீசி சுகாதாரக்கேட்டை உருவாக்குவதாக பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா இன்று நேரில் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட மேல 3-ஆம் வீதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இதன் எதிரில் மிகவும் பழமையான நைனாரி குளம் அமைந்துள்ளது. அக்காலத்தில் இந்த குளம் அப்பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்குப் பயன்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் மழைநீர்கால்வாய்கள் தூர்ந்து போனதால் கழிவு நீர் மட்டுமே இக்குளத்தில் சேரும் நிலை ஏற்பட்டது.

அத்துடன் மீன் சந்தையிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் இக்குளத்தில் விடப்பட்டதால் நல்லதண்ணீர் குளம் உப்பு நீர் குளமாக மாறியது. இதனால், துர்நாற்றம் வீசி அப்பகுதியைக் கடந்து செல்லும் மக்கள் முகம் சுழித்தபடி செல்லும் நிலை நீடித்தது. இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார் வந்தததையடுத்து, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டு குளத்தைச் சுற்றி நடை பாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யக்கூடிய நிலைக்கு மாறியது.

ஆனால், காலப்போக்கில் உரியபராமரிப்பின்றி, மீன் கழிவுகள் மற்றும் மீன்கள் கொண்டு வரும் தெர்மாகூல் அட்டை ஆகியவைகளை குளத்தில் கொட்டப்பட்டுதால் குளம் மீண்டும் கழிவ நீர்க்குட்டையாக மாறியது. பழையபடி துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானது.இந்த நிலையில், தினம்தோறும் மீன் மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் கடைகளில் மீன் வாங்க முடியாமலும் பெரும் சிரமம் அடைந்து வந்த நிலையில், மீன் மார்க்கெட்டில் உள்ள மீன் கடை களில் மீன் கழிவுகளும் அகற்றப்படாமல் இருந்து வந்ததால் நோய் தொற்று பரவ கூடிய சூழ் நிலை உருவானது. இந்த நிலையில், நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சுகாதாரமற்ற முறையில் இருந்து வந்த நிலையில் இது குறித்து புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, புதுக்கோட்டைமீன் மார்க்கெட் மற்றும் அதன் அருகில் உள்ள நைனாரிக்குளத்தையும் புதுக்கோட்டை எம்எல்ஏ- வை. முத்துராஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மீன் கழிவுகள் மற்றும் குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன் மார்க்கெட் சாலையோரத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் நாகராஜிடம், எம்எல்ஏ அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், நகராட்சி அலுவலர்கள், திமுக நகர கழக செயலாளர் க. நைனா முகமது, நெசவாளர் அணி அமைப்பாளர் எம். எம். பாலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 29 Aug 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  2. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  4. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  5. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  7. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  10. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்