/* */

புதுக்கோட்டையில் 1380 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் 1380 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்து ஒழித்தனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் 1380 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி ஊராட்சி விளாம்பட்டியைச் சேர்ந்த குட்டைராசு என்பவர் கவிநாரிப்பட்டி கண்மாய் அருகே அவருக்கு சொந்தமான இடத்தில் கள்ளச்சாராயம் தயாரித்து வருவதாக காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசுக்கு கிடைத்த ரகசிய தகவல் வந்தது.

நிகழ்விடம் சென்று அப்பகுதியில் சோதனையிட்டதில் கருவேலம் முட்கள் சூழ்ந்த புதருக்குள் பேரலில் தயாரித்து மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த சுமார் 300 லிட்டர் அளவு கொண்ட கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்த போலீசார் பேரலில் இருந்த கள்ளச்சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

போலீசார் வருவது தெரிந்தவுடன் கள்ளசாராய தயாரிப்பில் ஈடுபட்ட குட்டைராசு தப்பி ஓடிவிட்டார்இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளி குட்டைராசுவை தேடி வருகின்றனர்.

இதேபோல் அறந்தாங்கி, கந்தர்வகோட்டை,இராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,080 லிட்டர் கள்ளசாராயம் 19 லிட்டர் எரிசாராயம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் சீட்டாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 34 ஆயிரத்து 160 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 30 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  5. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  6. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  7. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  8. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  9. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  10. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்