/* */

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்ற 1989-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது

HIGHLIGHTS

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.கோடியில்   நலத்திட்ட உதவி வழங்கல்
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற  விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர்கள்  ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்டோர்

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, வங்கி கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று (29.12.2022) வழங்கி தொடங்கி வைக்கப்பட்டதை முன்னிட்டு, புதுக்கோட்டை, மஹராஜ் மஹாலில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.94.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றையதினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 960 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு ரூ.47.45 கோடியும், 100 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.45.10 கோடியும், 20 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.15.00 இலட்சமும், வாழ்ந்து காட்டுவோம். திட்டத்தின் மூலம் 9 நபர்களுக்கு இணை மானியம் ரூ.28.00 இலட்சம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான துவக்க நிதி ரூ.28.00 இலட்சம், சமுதாய திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.79.00 லட்சம், சமுதாய பண்ணைப் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ.83.00 லட்சம் என 1089 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 29,300 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.94 கோடியே 88 லட்சத்திற்கான வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் அமைச்சர்கள் பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சென்ற 1989-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.

பல்வேறு வறுமை ஒழிப்புத் திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கி, வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்கி, வங்கிக் கடன் இணைப்புகளையும், தொழில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி, பெண்களின் ஆற்றலை அதிகரித்து, சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் உன்னதப் பணியை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி எண்ணற்ற ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவர் பி.சின்னையா, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உதவித் திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 29 Dec 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?