/* */

பிஎம்கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்

PM Modi Scholarship -இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 தவணை ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 12 ஆவது தவணை தொகையைப்பெற நெறிமுறை களை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

பிஎம்கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகள் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்
X

PM Modi Scholarship -பிஎம்கிசான் உதவித்தொகை பெரும் விவசாயிகள் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தில் தொடர்ந்து ஊக்கத்தொகை பெற தங்கள் ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) .மெ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறுஇகுறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000- வீதம் ஆண்டிற்கு ரூ.6000- பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்துஇஅதிக விளைச்சல் பெற்று பண்ணை வருவாயை உயர்த்திட இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 தவணை ஊக்கத்தொகை வழங்கப் பட்டுள்ளது. 12 ஆவது தவணை தொகையைப் பெற அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் நிதி பெற்று வரும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கணினி மையங்கள் அல்லது தபால் நிலையத்திற்கு சென்று தங்கள் ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித் திட்டம் ஓர் மீள் பார்வை:

இந்தியாவில் உள்ள சிறுஇ குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டம் (பி.எம் கிசான் சம்மான் நிதி) 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் என ஆண்டிற்கு 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதியுதி அளிக்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.இந்தியா முழுவதும் 10.09 கோடி விவசாயிகள் இதில் பயன் பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் 10வது தவணை நிதியாக 20 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன் பெற நிலம் உடைய விவசாயிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது வருவாய் துறை அதிகாரிகள் நியமித்துள்ள தொடர்பு அலுவலரை அணுக வேண்டும்.

பொது சேவை மையத்தில், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக https://pmkisan.gov.in/ என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத் திற்குள் சென்றுஇ விவசாயிகள் முனையை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் புதிய விவசாயி என்பதை க்ளிக் செய்தால் ஆதார் எண் கேட்கும். அதை பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து விண்ணப்ப படிவம் வரும், அதில் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, கிராமம், மாவட்டம், மாநிலம், நிலத்தின் விவரம், புல எண், முகவரி, வங்கிக் கணக்கு எண், வங்கியின் ஐ.எப்.எஸ்.சி உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு, அவற்றை சரிபார்த்து, சேமிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிப்பது, ஏற்கெனவே இருக்கும் தகவலை மாற்றுவது, பயனாளர் தகவல் அறிவது, விண்ணப்பத்தின் நிலையை அறிவது என்பன உள்ளிட்டவற்றை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்.மாவட்ட வாரியான விண்ணப்பங்கள் மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரையை அனுப்புவார்கள்.இதையடுத்து தேர்வு செய்யப்படும் தகுதியான விவசாயிகளுக்கு நிதியுதவி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கஇ இந்திய அரசு வழங்கிய குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளருக்கான சான்றிதழ், ஜன் தன் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.இது மட்டுமின்றி, PMKISAN எனும் செல்போன் செயலியும் (மொபைல் ஆப்) உள்ளது. இதன்வழியாகவும் விண்ணப்பம் மற்றும் தகவல்களை பெறலாம். அதேநேரத்தில், நிறுவன விவசாயிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மாதம் 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டதின் கீழ் பயன்பெற முடியாது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 Oct 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!