/* */

ஐநா சபையில் சீனா அத்துமீறலை பிரதமர் மோடி பேசாதது ஏன்: கார்த்திக் சிதம்பரம்எம்.பி

ஐநா சபையில் ஆற்றியஉரையில் எந்தவிதமான விஷயமும் இல்லை அடுக்கு மொழியில் தான் பேசினாரே தவிர உபயோகமான பேச்சு இல்லை

HIGHLIGHTS

ஐநா சபையில் சீனா அத்துமீறலை பிரதமர் மோடி பேசாதது ஏன்: கார்த்திக் சிதம்பரம்எம்.பி
X

புதுக்கோட்டை அடுத்த திருக்கட்டளையில் பொதுமக்களிடமிருந்து குறைகள் அடங்கிய மனுவை பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக்  சிதம்பரம் பேச்சு.

சீனாவின் அத்துமீறல் குறித்து ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் பேசாதது ஏன்.சீனாவின் அத்துமீறல் குறித்து பேச பிரதமர் அஞ்சுவது ஏன் என்று கார்த்திக்சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருக்கட்டளை திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் சிதம்பரம் எம்பி மேலும் கூறியதாவது:

நேற்று தேவகோட்டையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகருக்கு இடையே நடந்த கைகலப்பு சம்பவம், காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக உள்ளது என்பதை காட்டுகிறது.அது ஒரு பெரிய சம்பவம் இல்லை.. கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் .கருத்து வேறுபாடுகள் இல்லாவிட்டால் அது அரசியல் கட்சியே கிடையாது.

சிந்தனை இல்லாத அரசியல் கட்சி சுதந்திரம் இல்லாத அரசியல் கட்சிகளில்தான் கோஷ்டிப் பூசல் இருக்காது. காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் பரவலாக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இந்தியாவிலேயே உள்ள பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி மாற்றங்கள் காங்கிரஸ் கட்சியில் தற்போது வந்து கொண்டுள்ளது. அதிரடியான மாற்றத்தை பஞ்சாபில் கொண்டு வந்துள்ளோம்.

நமது வரிப்பணம் நமக்கு செலவு செய்யாமல் வடநாட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு செலவு செய்கிறது.2024 தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழகத்தில் வெற்றி பெறும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக இங்கு வரக்கூடாது என்று பொது மக்கள் தெளிவாக உள்ளனர். திமுக அரசை பொறுத்தவரை பொதுமக்களுடைய எதிர்பார்ப்பையும் மீறி ஆட்சி சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.இந்திய பிரதமர் ஐநா சபையில் உரையாற்றுவது என்பது புதிதல்ல. பிரதமர் நேற்று ஐநா சபையில் ஆற்றிய உரையில் எந்தவிதமான விஷயமும் இல்லை. அடுக்கு மொழியில் தான் பேசினாரே தவிர உபயோகமான பேச்சு இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி எதிர்பாராத விபத்தினால் ஆட்சிக்கு வந்தார். மீண்டும் அது போன்ற எதிர்பாராத நிகழ்வு நடக்கலாம் என்று ஏங்குகிறார்.. அதனால்தான் 2024 சட்டசபை தேர்தல் வரும் என்று கூறி வருகிறார். ஆனால் அது நடக்காது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும்.அதிமுக-பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் வரை அதிமுக மீண்டும் வெற்றி பெற முடியாது. அடிமட்டத் தொண்டன்கூட பாஜகவோடு கூட்டணி இருப்பதை விரும்பவில்லை

உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று கூறுவது தவறு. இன்னும் தேர்தலே நடக்கவில்லை அதுக்குள் முறைகேடு என்று கூறினார் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொலை கொள்ளை ஆகியவை அதிகமாக நடந்து வருகிறது. தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இதனை தடுக்க வேண்டும்.தற்போது தமிழகத்தில் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் இதே நிலை தொடர்ந்து நடைபெற வேண்டும்.

மேலும், தில்லி நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு நடைபெற்று, ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார். இது மத்திய உள்துறையின் மிகப்பெரிய தோல்வி .தமிழக நிதி அமைச்சர் டி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருவததைத் தவிர்க்க பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றார் காரத்திக் சிதம்பம். இதில், திருமயம் முன்னாள் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.



Updated On: 26 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...