/* */

அரசு மறுவாழ்வு இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் மெய்யநாதன்

அரசு மறுவாழ்வு இல்லத்தில் புத்தாடைகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடிய அமைச்சர் மெய்யநாதன்.

HIGHLIGHTS

அரசு மறுவாழ்வு இல்லத்தில் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் மெய்யநாதன்
X

புதுக்கோட்டை மச்சுவாடி உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் மற்றும் மதிய உணவை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பில் மச்சுவாடியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42வது ஆண்டு அரசு மறுவாழ்வு இல்லத்தில் புத்தாடைகள் இனிப்பு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு துணை ஆளுநர் காசிராஜன், திட்ட இயக்குனர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

இதில் புதுக்கோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் தனஞ்ஜெய் ராமச்சந்திரன், செயலாளர் ராஜகுமார், பொருளாளர் கனகராஜன், மற்றும் திமுக நகரக் கழகச் செயலாளரும் ரோட்டரி சங்க நிர்வாகியுமான நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் மாருதி மோகன்ராஜ், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் சேவியர் உள்ளிட்ட புதுக்கோட்டை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு மறுவாழ்வு இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் மதிய உணவுகளை வழங்கி சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மெய்யநாதன் பேசினார். அப்போது,

தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் அரசு மறுவாழ்வு இல்லம் அமைக்கப்பட்டு பல வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் இந்த மறு வாழ்வு இல்லத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை குறைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நான் எப்பொழுதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது கிடையாது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைதான் கொண்டாடுவது வழக்கம் ஆனாலும் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களுடன் சேர்ந்து நாங்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றோம்.

அதுபோல் இன்று புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு மையத்தில் புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்று வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் நிகழ்விற்கு நானும் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது தமிழக முதலமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று நிகழ்ச்சியில் பேசினார்.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், நெசவாளர் அணி அமைப்பாளர் எம் எம் பாலு , நகர துணை செயலாளர் மதியழகன் ,வட்டச்செயலாளர் கண்மணி சுப்பு, உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 4 Nov 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!