/* */

குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெற அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெறலாம்

HIGHLIGHTS

குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெற அழைப்பு
X

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (பைல் படம்)

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெறலாம்.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசனம்; அமைத்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் - துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 800 எக்டர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் றறற.வnhழசவiஉரடவரசந.வn.பழஎ.in என்ற வலைத்தளத்தில் ஆஐஆஐளு என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினிச் சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

நுண்ணீர் பாசனம் அமைப்பதனால் ஏற்படும் பயன்கள், குறைந்த நீரில் அதிக சாகுபடி பரப்பு மேற்கொள்ளலாம். களைகள் எளிதாக கட்டுப்படுகிறது. உரம் செலுத்துவது எளிதாகிறது. நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் நன்கு பயனளிக்கிறது. கரும்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடலாம்.

சொட்டுநீர் பாசன அமைப்பின் மூலம் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரம் செலுத்தும் அமைப்பின் வழியாக உரங்களை எளிதாகவும், விரயமின்றி, வேர்பகுதிக்கு அருகில் செலுத்த முடியும். இதனால் உரச்செலவு குறைவதோடு பயிரின் வளர்ச்சியும் சீராக இருப்பதால் குறைவான செலவு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டில் கூடுதல் மகசூல் மற்றும் லாபம் கிடைக்கிறது.

எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Dec 2023 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா