/* */

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகம் முன்பு தொழிற்சங்க கொடிஏற்றி வைத்து கொண்டாடினர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி
X

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் இன்று மே 1ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் பேரணி கட்சி கொடி ஏற்றுதல் என தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வடக்கு ராஜவீதி மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகம் முன்பு தொழிற்சங்க கொடிகளை ஏற்றி வைத்து கோஷங்கள் எழுப்பி மே தினத்தை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் தொமுச மாவட்டத் தலைவர் ரத்தினம் தலைமை வைத்தார். பேரவையின் செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.இந்த பேரணியில் சண்முகம் ,நாகராஜன், அருள் ஞானசேகரன், மணிமொழியன், மூர்த்தி, பழனிவேலு, ஆறுமுகம் உள்ளிட்ட மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 May 2022 12:36 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி