/* */

இன்று புரட்டாசி அமாவாசை: நீர்நிலை, குளக்கரைகளில் தர்ப்பணத்திற்கு தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நீர்நிலைகள், குளக்கரைகளில் தர்ப்பணம், திதி கொடுக்க, புதுகை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

HIGHLIGHTS

இன்று புரட்டாசி அமாவாசை: நீர்நிலை,  குளக்கரைகளில் தர்ப்பணத்திற்கு தடை
X

மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கும், நேற்று ஒரு சிலர், புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவிலில் குளக்கரைகளில் தர்ப்பணம்  செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை வருடங்களாக மகாளய அமாவாசை மற்றும் அம்மாவாசை தினங்களில் குளக்கரைகள், நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இன்று மகாளய அமாவாசை என்ற நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குளக்கரை மற்றும் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளக்கூடாது மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை சாந்தாராம்அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கோவில் குளக்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இன்று மாவட்ட நிர்வாகம் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதால் புதுக்கோட்டை சாந்த ராமன்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு இல்லாமல், களை இழந்துள்ளது. தடையை மீறுவோரை கண்காணிக்க, சாந்தாரம்மன் கோவில் முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 6 Oct 2021 1:12 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...