/* */

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள், துறை அலுவலர்களுக்கான இணை மானியத்திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இணைமானிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த கருதரங்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கான இணை மானியத் திட்டம் குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இணைமானிய திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டு தெரிவித்ததாவது; தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை வட்டாரங்களைச் சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் தனி நபர் மற்றும் குழு தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30 சதவிகிதம் (அதிகபட்சமாக 40 இலட்சம் வரை) மானியமாக வழங்குவதற்காக இணை மானிய திட்டம் என்ற செயல்பாடு செயல்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இணை மானிய திட்டம் குறித்து வங்கியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கருத்தரங்கம்; நடைபெற்றது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் புரிய ஆர்வமுள்ள தனி நபர் மற்றும் குழு நபர்களை கண்டறிந்து ஆரம்ப நிலை சரிபார்ப்புகளை நிறைவு செய்து வங்கிக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உடனடியாக பரிசீலனை செய்து கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெய்கணேஷ், ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் ரேவதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சம்பத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், செயல் அலுவலர்கள் கிருபாகரன், வேத இளையராஜா, ஜெகதீசன், ராஜேந்திரன், திராவிடச்செல்வி, தொழில் நிதி வல்லுநர் ரவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...