/* */

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை செலுத்த அறிவுறுத்தல்

Jal Jeevan Mission Scheme -நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பினை அந்தந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது

HIGHLIGHTS

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பொதுமக்கள் தங்களது பங்களிப்பை செலுத்த அறிவுறுத்தல்
X

பைல் படம்

Jal Jeevan Mission Scheme -புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திட வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

2019 சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டிருப்பது. இந்தியாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் முக்கியமான முன்னகர்வு. மாநில அரசுகளுடன் இணைந்து 2024-க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்கள் மூலமாகக் குடிநீர் வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு.

குழாய்களின் வழியாக வீடுகளுக்கு நேரடியாகக் குடிநீர் வழங்குவது என்பது பெண்களின் பணிச் சுமையை மட்டும் குறைக்கவில்லை. ஊரகங்களில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாக இன்னமும்கூட பொது நீர்நிலைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்குச் சமத்துவத்துக்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.

ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகள் ஒரே பகுதியில் அமைந்திருப்பதில்லை. ஒரு குடியிருப்பில் வசிப்பவர்கள் குடிநீருக்காக மற்ற குடியிருப்புகளுக்குச் செல்வது பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. இன்னமும்கூட பொதுக் கிணறு அல்லது கை பம்ப் வசதியில்லாத ஊரகப் பகுதிகளும் இருக்கவே செய்கின்றன. அத்தகைய பகுதிகளில் வசிக்கும் பட்டியலினத்தவர்கள் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுவருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை நிலை.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், ஊரகப் பகுதியில் உள்ள பட்டியலினத்தவர் வீடுகளில் 28% மட்டுமே வீட்டிலேயே குடிநீர் கிடைக்கப்பெறும் வசதி கொண்டவை என்பது தெரியவந்துள்ளது. அதிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பைப் பெற்றவை 19% மட்டுமே. சுத்தமான குடிநீர் வசதியானது உடல்நலப் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஆனால், அவ்வசதி அனைவருக்கும் பாரபட்சமின்றிக் கிடைக்க வேண்டும் என்றால், வீடுகளுக்கு நேரடி இணைப்பு அளிப்பதன் மூலமாக மட்டுமே சாத்தியம்.

இத்திட்டத்தின் கீழ், தவறான நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் நீர்க் கசிவு மற்றும் அடைப்புகளை எளிதாகக் கண்டறிந்து, உடனடியாக அவற்றைச் சரிசெய்யவும் குடிநீர்க் குழாய்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குடிநீருக்காக விதிக்கப்படும் கட்டணம், ஏழை எளியவர்களால் இயலக் கூடிய தொகையாக இருப்பதும் முக்கியம்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மத்திய அரசின் 45 சதவீத பங்குத்தொகையும் மாநில அரசின் 45 சதவீத பங்குத்தொகையும் மற்றும் பொதுமக்களின் 10 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும். குக்கிராமங்களில் சமூக பங்களிப்பானது SC/ST குக்கிராமங்களில் 5 சதவீதமும், பொது குக்கிராமங்களில் 10 சதவீதமும் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கு 146 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 579 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கென சமூக பங்களிப்பாக ரூ.5.006 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் 2022 - 23 -ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 81 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென மொத்த மதிப்பீட்டில் சமூக பங்களிப்பாக ரூ.1.09 கோடி மதிப்பில் பெற வேண்டியுள்ளது.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திடவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பொதுமக்களிடம் சமூக பங்களிப்பு பெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சிகளிலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகள் பங்கெடுத்து பொதுமக்களிடமிருந்து சமூக பங்களிப்பு பெறுவதற்கான உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 12 April 2024 6:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!