நூதன முறையில் தனது சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த சுயேட்சை வேட்பாளர்

தன்னுடைய உடல் முழுவதும் கைப்பை சின்னத்தை மாலையாக கழுத்தில் மாட்டிக்கொண்டு பொதுமக்களிடம் நூதன முறையில் பிரசாரம் செய்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நூதன முறையில் தனது சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்த சுயேட்சை வேட்பாளர்
X

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பழனிவேலு    உடல் முழுவதும் தன்னுடைய சின்னமான கை பை சின்னத்தை மாலையாக அணிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் 

நூதன முறையில் தன்னுடைய சின்னத்தை பொதுமக்களிடம் பிரசாரம் செய்த சுயேட்சை வேட்பாளர் பழனிவேலு.

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, ஆகிய தேர்தல் நடைபெற இருக்கிறது.மேலும் திமுக ,அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்று சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு உரிய சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் சின்னங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு நூதன முறையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பழனிவேலு தன்னுடைய கைப்பை சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் கைப்பையை மாலையாக கோர்த்து தன்னுடைய உடல் முழுவதும் கைப்பை சின்னத்தை மாலையாக தொடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு பொதுமக்களிடம் நூதன முறையில் பிரசாரத்தை மேற்கொண்டார்.மேலும் உடல் முழுவதும் கைப்பையை மாட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று தனக்கு கைப்பை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பொது மக்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது வாக்காளர் இடத்தில்வரவேற்ப்பை பெற்றது

Updated On: 8 Feb 2022 8:45 AM GMT

Related News