/* */

உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல்: கலெக்டர் உத்தரவு

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு உத்தரவு.

HIGHLIGHTS

உடனுக்குடன் நெல் மூட்டைகளை கொள்முதல்: கலெக்டர் உத்தரவு
X

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவிப்பு.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்ததாவது:

விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த நெல்லுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் இடைதரகர்கள் இன்றி நேரடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெற்று தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக அரசால் வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்பொழுது வரை 99 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் குறுவை சாகுபடியாக 6,198.92 ஹெக்டேர் பரப்பளவில் 37,194 மெ.டன் நெல் கொள்முதல் செய்திட வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக புதுக்கோட்டை மண்டலம் மூலமாக 01.06.2021 முதல் தற்பொழுது வரை 34,698 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தையும் மழை நீர் உள்ளிட்ட சேதங்களில் பாதிக்காத வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு கிடங்குகளுக்கு கடந்த ஒருவார காலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் இதுவரை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 31,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் கொள்முதல் செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.



Updated On: 21 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...