/* */

இந்து முன்னணி நிர்வாகியின் கார் எரிப்பு: நடவடிக்கைகோரி எஸ்பியிடம் மனு

இந்து முன்னணி சார்பில் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்

HIGHLIGHTS

இந்து முன்னணி நிர்வாகியின்  கார் எரிப்பு: நடவடிக்கைகோரி  எஸ்பியிடம் மனு
X

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கற்பக வடிவேலு தலைமையில் மனு அளித்தனர்

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கார் எரிப்பு சம்பவம் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, புதுக்கோட்டை எஸ்பியிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளராக கற்பக வடிவேல் ஐந்து வருடங்களாக பணியாற்றி வருகிறார். இந்து முன்னணி சார்பில் பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

இவரது நடவடிக்கைகளைப் பிடிக்காத ஒரு சிலர், இவருக்கு தொலைபேசி வாயிலாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். கடந்த 17.10.2019- அன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பேலஸ் நகரில், அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது, காரை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்தனர்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர், இவருடைய சொந்த ஊரான வாணக்கன்காடு கிராமத்தில் இவருடைய வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். இது தொடர்பாக வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவ்விருசம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கற்பகவடிவேலு தலைமையில், இந்து முன்னணியினர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபனிடம் இன்று புகார் மனு அளித்தனர். அதில், உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளனர்.


Updated On: 13 Sep 2021 8:06 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?