/* */

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்பு குழுக் கூட்டம்

ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு- கண்காணிப்பு குழுக் கூட்டம்
X

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு,முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குபின்னர் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, ஊரக மின் மயமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம், தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா.

மதிய உணவுத் திட்டம், ஜல் ஜீவன் மிசன், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட 45 திட்டப் பணிகள் விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடை யும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் (DISHA ) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களிடையே மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 Jan 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?