/* */

கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்எல்ஏ முத்துராஜா திறப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று புதுக்கோட்டை ஒன்றியம் பி.மாத்தூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம்: எம்எல்ஏ முத்துராஜா திறப்பு
X

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பி மாத்தூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதலை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா இன்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் விளைவித்து அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யாமல் பல்வேறு இடங்களில் கொட்டி வைத்து தொடர் மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகி வருகிறது. இதை தடுக்கும் விதத்தில் கிராம பகுதிகளில் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று புதுக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பி.மாத்தூர் பகுதியில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்ததால், அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்வதற்கு உதவிய, சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பாஞ்சாலன் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 5 Oct 2021 10:20 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...