/* */

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Pudukkottai Panchayat Union Works -அரசின் திட்டங்களை முறையாக பொதுமக்க ளுக்கு சென்று சேரும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

HIGHLIGHTS

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதியில் வளர்ச்சித்திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
X

முள்ளூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி   முறைகள் குறித்தும்  ஆய்வு செய்த ஆட்சியர் கவிதாராமு

Pudukkottai Panchayat Union Works - புதுக்கோட்டை ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக அரசு ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்சாரவசதி உள்ளிட்டவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், புதுக்கோட்டை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு கோப்புகளின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கிராம ஊராட்சிகளில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்டவைகளின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள்; குறித்தும், நிறைவடைந்துள்ள பணிகள் குறித்தும், நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகள்; குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், அரசின் திட்டங்களை முறையாக பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிமெண்ட் கிட்டங்கியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சிமெண்ட் மூட்டைகளின் இருப்பு குறித்தும், வருகை மற்றும் விநியோகம் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் முள்@ர் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியத்தின்கீழ் ரூ.4.36 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், வடவாளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் கட்டுமானப் பணியினையும், மேலும் வடவாளம் ஊராட்சியில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் முள்ளூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், அட்டவணையின் படி மதிய உணவுகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

மேலும் முள்ளூர் ஊராட்சியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில், முள்@ர் தரிசு நிலத் தொகுப்பு திட்டப் பணிகளின்கீழ், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் மற்றும் உயிர் உரங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் பி.சின்னையா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஜோஸ்பின் நிர்மலா, உதவி செயற்பொறியாளர் கலைவாணி, உதவி பொறியாளர் கண்ணகி, சிவபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன், குமாரவேலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 9:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது