/* */

பகத்சிங் நினைவு தினம்: புதுகையில் மாபெரும் இரத்ததான முகாம்

பகத்சிங் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பகத்சிங் நினைவு தினம்:  புதுகையில் மாபெரும் இரத்ததான முகாம்
X

சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில்  நடைபெற்ற ரத்ததான   முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு  சான்றிதழ் வழங்கிய சட்டத்துறை   அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டையில் மார்ச் 23 தேதியன்று புரட்சியாளர் பகத்சிங் 91-வது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று நடைபெற்றது. இதில் 91 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.

நிகழ்வை, கந்தவர்க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இரத்த தானம் செய்தவர்களை பாராட்டியதோடு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் ராமு, மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  2. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  3. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  4. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
  5. வீடியோ
    🔥Ajith Billa Re-Release🔥 FDFS Celebration | Ajith Kumar | Billa |...
  6. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  8. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?