/* */

நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில் ரத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை முகாம்

நடைப்பயிற்சியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சக்கரை, ரத்தஅழுத்தம் குறித்த பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது

HIGHLIGHTS

நடை பயிற்சியாளர் சங்கம் சார்பில் ரத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை முகாம்
X

புதுக்கோட்டை புதுக் குளத்தில் நடை பயிற்சியாளர் சங்கத்தின் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை புதுக் குளத்தில் நடை பயிற்சியாளர் சங்கம் மற்றும் துரைசாமி நர்சிங் ஹோம் இணைந்து இலவச ரத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆலோசனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமில், புதுக்கோட்டை புது குளத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சக்கரை மற்றும் ரத்த அழுத்தம் நோய் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடைப்பயிற்சியாளர் சங்கத் தலைவர் நைனாமுகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜா, இருதய சிறப்பு மருத்துவரும், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவருமான மருத்துவர் மாரிமுத்து, நாகரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ ஆலோசனை முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களில், அதிக உடல் சோர்வு உள்ளவர்கள், நாள் முழுவதும் அதிக தண்ணீர் தாகம் உள்ளவர்கள், தசைப்பிடிப்பு உள்ளவர்கள், பசியின்மை உள்ளவர்கள், பசித்தும் உணவில் நாட்டம் இல்லாதவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள், இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் போக்கினால் தூக்கமின்மை , பாதங்களில் மாறுபட்ட உணர்வு, உடல் எடை குறைந்தவர்கள், சர்க்கரை நோயால் உடல் எடை அதிகரித்துள்ளவர்கள், அதிகமுடி உதிர்வு உள்ளவர்கள். பெண்களுக்கு பாதங்களில் வெடிப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On: 20 Aug 2021 10:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா