/* */

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: விவசாயிகள் பயன்பெறலாம்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: விவசாயிகள்  பயன்பெறலாம்
X

புதுக்கோட்டை மாவட்டம்அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு 85 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.05.2022 திங்கட்கிழழை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னையிலிருந்து காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இத்திட்டத்தினை செயல்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை வட்டாரத்தில் வடவாளம், 9ஏ நத்தம்பண்னை, கவிநாடு மேற்கு, முள்ளூர், கவிநாடு கிழக்கு, பெருங்களூர் ஆகிய கிராம ஊராட்சிகளும், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கல்லாக்கோட்டை, துவார், குளத்தூர், சுந்தம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளும், திருவரங்குளம் வட்டாரத்தில் மாங்காடு, வடகாடு, வெண்ணாவல்குடி, எல்.என.புரம், கொத்தமங்கலம், கல்லாலங்குடி, குலமங்களம் வடக்கு, குலமங்களம் தெற்கு ஆகிய கிராம ஊராட்சிகளும், கறம்பக்குடி வட்டாரத்தில் மாங்கோட்டை, முள்ளங்குறிச்சி, பிலாவிடுதி, மழையூர், கலபம், ஓடப்பவிடுதி, வாண்டான்விடுதி கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அறந்தாங்கி வட்டாரத்தில் மறமடக்கி, திருநாலூர், பெருங்காடு, அரசர்குளம் கீழ்பாதி, குரும்பூர், நாகுடி, ஆவணத்தான்கோட்டை, ஆயிங்குடி, ஏகப்பெருமாளூர், கம்மங்காடு ஆகிய கிராம ஊராட்சிகளும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் கரூர், வீரமங்களம், புத்தாம்பூர், சாத்தியகுடி, திருப்புவனவாசல், நாட்டானிபுரசகுடி, பெருநாவலூர், பொன்னமங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளும், மணமேல்குடி வட்டாரத்தில் வெட்டிவயல், கீழமஞ்சகுடி, காரக்கோட்டை, கோட்டைபட்டினம் ஆகிய கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

திருமயம் வட்டாரத்தில் துளையானூர், ஆதனூர், லெம்பலக்குடி, மேலூர், அரசம்பட்டி கிராம ஊராட்சிகளும், அரிமளம் வட்டாரத்தில் தேக்காட்டூர், திருவாக்குடி, வாளரமாணிக்கம், கடியாபட்டி, கும்மங்குடி கிராம ஊராட்சிகளும், பொன்னமராவதி வட்டாரத்தில் ஆலவயல், அரசமலை, மரவாமதுரை, வார்பட்டு, ஒலியமங்கலம், திருக்களாம்பூர் கிராம ஊராட்சிகளும், அன்னவாசல் வட்டாரத்தில் எண்ணை, பரம்பூர், இராப்பூசல், திருவேங்கைவாசல், கிளிக்குடி, புல்வயல், விளாத்துப்பட்டி, இருந்திராபட்டி ஆகிய கிராம கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விராலிமலை வட்டாரத்தில் கத்தலூர், பூதக்குடி, கொடும்பா@ர், மண்டையூர், விரலூர், இராஜாளிபட்டி, இராஜகிரி, நம்பம்பட்டி கிராம ஊராட்சிகளும், குன்னான்டார்கோவில் வட்டாரத்தில் பள்ளத்துப்பட்டி, அண்டக்குளம், புலியூர், மேலபுதுவயல், டி.கீழையூர், தெம்மாவூர் கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தை தமிழக முதல்வர் 23.05.2022 திங்கட்கிழமை அன்று காலை 10. மணி அளவில் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த கிராம ஊராட்சிகளில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்க சான்றளிப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள், நெசவு மற்றும் காதித்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் தொடக்கவிழாவில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் நெட்டை இரக தென்னங்கன்றுகள் விநியோகம், வயல் வரப்புகளில் பயறு சாகுபடி செய்வதற்கு பயறு விதைகள் விநியோகம், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் விநியோகம் செய்யப்படும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் வீட்டு தோட்டம் அமைப்பதற்கு விதைகள் விநியோகம், பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் டிரம் விநியோகம், வரப்பு ஓரங்களில் நடுவதற்கு பழச்செடிகள் மற்றும் பழக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே இவ்விழாவில் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Updated On: 22 May 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!