/* */

விதிமீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!

புதுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

விதிமீறும் காய்கறி  வியாபாரிகள் மீது  நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
X

ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் எச்சரிக்கை விட்ட காட்சி.

கொரோன வைரஸ் தொற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் பெருகி வருவதால் புதுக்கோட்டை நகர பகுதிகளில் செயல்பட்டு வந்த பெரிய மார்க்கெட் உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு காய்கறி மார்க்கெட் அனைத்தும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் தற்காலிகமாக இயங்கும் என நகராட்சி அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் வியாபாரிகளுக்கு செய்து கொடுத்துள்ளது .

அதன்படி ஒவ்வொரு கடை முன்பும் கட்டங்கள் வரையப்பட்டு தனி மனித இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வரிசையாக காய்கறிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதிகாரிகள் பொதுமக்களிடம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகள் வழங்கினால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு அபதாரம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமும் எச்சரித்து வருகின்றனர் .

அதேபோல் காய்கறி சங்கத்தின் சார்பிலும் 10 மணிக்குள் கடைகள் அனைத்தையும் எடுத்து விட வேண்டும் பத்து மணிக்கு மேல் வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காய்கறி சங்கத்தின் சார்பிலும் ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர் ஒரே இடத்தில் அனைத்து காய்கறிகளும் கிடைப்பதால் பொதுமக்களுக்கும் சிரமமில்லாமல் நோய்த்தொற்று பரவாமல் கூட்டமாக கூடாமல் இருக்கும் என்ற நோக்கத்திலேயே தற்போது புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் அனைத்தும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

#instanews #tamilnadu #vegetable traders #இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #விதிமீறும் #காய்கறி #நடவடிக்கை #காவல்துறை #actionagainst #policealert #எச்சரிக்கை #warning #resellers #vegetabletraders #violatingrules #alert #police #quarantine #lockdown #fulllockdown #selfawareness #stayhome #staysafe

Updated On: 17 May 2021 5:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  3. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  4. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  5. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  8. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  9. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  10. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்