/* */

நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்

நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்
X

ஆட்சியர் மெர்சி ரம்யா(பைல் படம்)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005- அட்டவணை ஐ பிரிவு 30-ன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய உத்தரவுகள் பிறப்பித்திட குறை தீர்வு அமைப்பு அமைத்துருவாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட குறைதீர்ப்பாளராக திரு.எம்.ரகோத்தமன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட குறை தீர்வு அமைப்பே பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(ஊரகம்) திட்டம் தொடர்பான புகார்களையும் விசாரணை செய்து தீர்வு காணும் அமைப்பாக செயல்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(ஊரகம்) திட்டம் தொடர்பான புகார்களையும் இந்த குறைதீர்வு அமைப்பிடமே அளித்திடலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(ஊரகம்) திட்டம் தொடர்பான புகார்களை 9786243219 என்ற அலைபேசியிலும் திரு.எம்.ரகோத்தமன், குறைதீர்ப்பாளர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(ஊரகம்) திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அஞ்சலிலும் அனுப்பி வைத்திடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Dec 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  3. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  6. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  7. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  8. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  9. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  10. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...